• Jun 05 2023

இந்தியன் 2 படக்குழு தென்னாப்பிரிக்கா போக காரணம் இது தானா? வெளியான சுவாரஸ்யத் தகவல்!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்கிய இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான நடந்து வருகிறது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவில், பல்லாயிரம் அடி உயரத்திலான விமான சாகசக் காட்சிகள் உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. தென்னாப்பிரிக்காவில் சுமார் 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியன் 2 படக்குழு தென்னாப்பிரிக்காவில் நடந்ததற்கு முக்கிய காரணம், பிரிட்டிஸ் ஆட்சிகாலத்தில் இருந்த ரயில் அங்குதான் பல ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இந்த ரயில் உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்பதால் படக்குழு தென்னாப்பிரிக்கா சென்று படப்பிடிப்பினை நடத்தியது.. இங்குதான் இந்தியன்2 படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement