• Apr 16 2024

தனது வீட்டில் நாடகக் கலைஞர்களுக்கு விருந்தளித்த நம்ம சூப்பர் ஸ்டார்- அடடே இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இயக்குநராக நெல்சன் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் பீஸ்ட். இத் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தாலும் விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்குவதாக கூறப்படுகின்றது. இப்படம் ரஜினியின் 169 படம் என்பதோடு இப்படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிழ் நாடகக் குழுவான யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்டின் (யுஏஏ) ‘சாருகேசி’ நாடகத்தைப் பார்த்திருந்தார்.

அதனால் ஈர்க்கப்பட்ட அவர், நடிகர்கள் மற்றும் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியதோடு தனது இல்லத்தில் அனைவருக்கும் விருந்தும் அளித்துள்ளார்.அந்தப் படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன .நாடக கலைஞர் ஒய்.ஜி.மகேந்திரன் UAA குழுவின் தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement