• Mar 23 2023

சிங்கம் படத்தின் ரீமேக்கை தட்டி விட்டு.. இதுவரை இந்தியில் நடிக்காமல் இருக்கும் அனுஷ்கா.. காரணம் இதுதானா..?

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறிப்பாக ரஜினி, விஜய், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அத்தனை பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கிறார். 


அத்தோடு பான் இந்தியப் படமான பாகுபலி மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகையாகவும் வெகுவாக உயர்ந்தார்.இந்நிலையில் பிராந்திய மொழி படங்களில் மட்டுமே நீண்ட காலம் நடித்து வந்த அனுஷ்கா இந்தியில் மட்டும் இதுவரை நடிக்கவில்லை. 

இதற்கான சுவாரஸ்யமான காரணத்தை தற்போது அனுஷ்கா வெளிப்படுத்தி இருக்கிறார். அந்தவகையில் இதுகுறித்து அனுஷ்கா சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் கூறுகையில் "சூர்யாவும், நானும் தமிழில் நடித்த சிங்கம் படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார்கள். அஜய்தேவ்கன் கதாநாயகனாக நடித்தார். 


அந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு முன்பு என்னைத்தான் படக்குழுவினர் அணுகினார்கள். ஆனால் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சினை காரணமாக அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு வந்த இந்தி பட வாய்ப்புகள் எனது இமேஜுக்கு தகுந்தவையாக இல்லாமல் இருந்ததால் அவற்றை நான் விலக்கி விட்டேன்" எனக் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும் என்று இப்போதும் நம்பிக்கையோடு காத்துக் கொண்டு இருப்பதாகவும் அனுஷ்கா தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement