• May 29 2023

பொன்னியின் செல்வன் பட புகழ் பூங்குழலி ஒல்லியாக இருக்க இது தான் காரணமா..?

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில்  அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து ஜகமே தந்திரம், கேப்டன், கார்கி, கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து இப்போது தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிவிட்டார்.



மேலும் அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து மக்களுக்கு மிகவும் நெருக்கமான நாயகியாக மாறிவிட்டார்.

ஐஸ்வர்யா லட்சுமி காலை மற்றும் மாலை 2 வேளையும் ஜிம் செல்வாராம், அங்கு செல்வதை எப்போதும் நிறுத்த மாட்டாராம்.



அத்தோடு அதிகம் அவர் கார்டியோ பயிற்சிகளை செய்வாராம், கார்டியோ பயிற்சி மூலம் தனது எடையை 55 கிலோவில் அப்படியே மெயிண்டெயின் செய்து வருகிறார்.

காலை எழுந்ததும் 3 கிளாஸ் வெந்நீர், காலை உணவு வேக வைத்த முட்டை மற்றும் பழங்கள். அத்தோடு மதியம், சிறிதளவு சாதம் மற்றும் அதிகமான அவித்த காய்கறிகளை சேர்த்துக்கொள்வாராம். பழ சாருக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


அத்தோடு இரவு பெரும்பாலும் இவர் லைட் வெயிட் உணவுகளை எடுத்துக்கொள்வாராம். அதாவது, இட்லி, ஆப்பம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வாராம். தனது உடல் எடையை மெயின்டெயின் செய்ய ஐஸ்வர்யா லட்சுமி பாலோ செய்யும் டயட் இதுதானாம்.


Advertisement

Advertisement

Advertisement