• Apr 01 2023

திடீரென விஜய் டிவியில் இருந்து விலக இது தான் காரணமா..? சாய் காயத்ரி கூறிய விளக்கம்

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதில் திடீரென ஐஸ்வர்யாவாக நடித்து வந்த நடிகை சாய் காயத்ரி வெளியேறி இருந்தார் .

கதையில் தனது கதாபாத்திரம் மாறும் விதம் பிடிக்கவில்லை என்பதால் அவர் வெளியேறிவிட்டதா கூறியிருந்தார்


என்ன பிரச்சனையால் வெளியேறினார் என்ற தகவலை சாய் காயத்ரி தெரிவித்து இருக்கிறார். ஆரம்பத்தில் தான் நடிக்க வந்த போது ஐஸ்வர்யா ரோலுக்கு பியூட்டி பார்லர், குடும்பத்தில் முக்கிய இடம் இருக்கும் என சொன்னார்கள் என்றும், ஆனால் ஒரு வருடம் ஆகியும் அப்படி எதுவும் வரவில்லை, அடுத்து எதிர்மறையாக மாறும் காட்சிகளிலும் நடிக்க விருப்பம் இல்லை என்பதால் தான் வெளியேறிவிட்டேன் என சாய் காயத்ரி கூறி இருக்கிறார்.

"விலகுவதாக கூறியபோது, நன்கு யோசித்து கூறும்படி டைம் கொடுத்தார்கள், அதன் பின்னும் நான் முடிவில் உறுதியாக இருந்தகால் சுமூகமாக சீரியலில் இருந்து வெளியேறிவிட்டேன். இயக்குநர், விஜய் டிவி என யாருடனும் சண்டை எல்லாம் போடவில்லை" என சாய் காயத்ரி கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement

Advertisement