• Sep 26 2023

பிரபல கலை இயக்குநர் தற்கொலை... காரணம் இதுதானா..? பேரதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் பிரபல கலை இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நிதின் சந்திரகாந்த் தேசாய்.  இவர் 'ஹம்தில் தே சுக்கே சனம்,  லகான், தேவ்தாஸ்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஆடம்பரமான செட்களை வடிவமைத்து அதில் வெற்றியும் கொண்டிருக்கின்றார்.


மேலும் இவர் சிறந்த கலை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை பெற்று சாதனையும் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாது தனது 20 வருடசினிமா  வாழ்க்கையில், அசுதோஷ் கோவாரிகர், விது வினோத் சோப்ரா, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி போன்ற பல சிறந்த இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்றி இருக்கின்றார்.


இந்நிலையில் நிதின் சந்திரகாந்த் தேசாய்  கலபூர் ராய்கரில் உள்ள அவரது என்டி ஸ்டுடியோவில் யாருமே எதிர்ப்பாராத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதாவது இவர் நிதி நெருக்கடியால் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


மேலும் இவர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அவரது 58 வது பிறந்தநாள் கொண்டாடவுள்ள நிலையில் இவரது மரணம் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்குப் பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement