• May 29 2023

ஹீரோயினாக களமிறங்கவுள்ள நடிகை தர்ஷனா... 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் இருந்து விலகியமைக்கான உண்மைக் காரணம் இதுதானா..?

Prema / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக 'தமிழும் சரஸ்வதியும்' தொடர் இருந்து வருகின்றது. இதில் தீபக் மற்றும் நக்ஷத்திராஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த சீரியலில் வசுந்தராவுக்கு குழந்தை பிறப்பது போல சமீபத்தில் ஒரு சில காட்சிகள் வந்திருக்கிறது. இதனையடுத்து வசுந்தரா ரோலில் நடித்து வந்த நடிகை தர்ஷனா திடீரென தொடரில் இருந்து விலகி இருக்கிறார். 


இந்த சீரியல் வாயிலாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த அவர் திடீரென விலகியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க விருப்பம் இல்லாமல் தான் தர்ஷனா தொடரில் இருந்து வெளியேறினாரா என்கிற கேள்வியும் பலரிடையேயும் எழுந்திருக்கிறது.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியல் ஒன்றில் தர்ஷனா ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி இருக்கின்றாராம். அத்தோடு இந்த சீரியலினுடைய ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பமாகும் எனவும் கூறப்படுகின்றது. 


Advertisement

Advertisement

Advertisement