• Apr 20 2024

நடிகர் பகத் ஃபாசிலுக்கு நஸ்ரியா வைத்த செல்லப் பெயர் இது தானா?-இன்ஸ்டா ஸ்டோரியால் வெளிவந்த தகவல்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் பகத் ஃபாசில். ஆரம்பத்தில் சுமாரான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் தற்பொழுது சூப்பர் ஹிட் படங்களில் நடித்த வருகின்றார். அதிலும் விக்ரம் படத்தில் இவரது கதாப்பாத்திரம் வேற லெவலில் பேசப்பட்டது.

இதனைஅடுத்து மலையாளத்தில் இவர் நடித்த 'மலையன்குஞ்சு' திரைப்படம் . ஒரு சர்வைவல் திரில்லர் திரைப்படமாக கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று பஹத் பாசில் தனது 40வது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடினார். பஹத் பாசிலுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நஸ்ரியா வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் போக கடற்கரை ஓரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'ஷானுவுக்கு 40 வயதாகி விட்டது' என எழுதியுள்ளார். நடிகர் பஹத் பாசிலின் செல்லப் பெயர் ஷானு என்பதை நஸ்ரியா குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement