• Apr 20 2024

நடிகை குஷ்புவின் அம்மா இவர் தான் தானா?- வெளியாகிய அழகிய புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. இவர் ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.இதனை அடுத்து தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வருவதோடு தனது சுய கருத்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலமும் தெரிவித்து வருகின்றார்.மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அண்மையில் கூட தனது உடல் எடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.


மேலும் தற்பொழுது தளபி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அம்மாவுடன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement