ஜோதிகாவின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது இந்த இயக்குனரா?-பேச்சுவார்த்தை நடத்தி வரும் படக்குழு

316

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஜோதிகா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானதோடு தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கின்றார்.

மேலும் இவர் நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்திருப்பதோடு இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர். அந்த வகையில் திருமணத்திற்குப் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் ரீஎன் ரீ கொடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் 36 வயதினிலேயே என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

அதையடுத்து வரிசையாக அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் அந்த படங்களை சூர்யா – ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில் ஜோதிகாவின் அடுத்த படம் ஒன்றை கண்டநாள் முதல் இயக்குனர் பிரியா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்து இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.