• Mar 29 2024

மீனாவிற்கு 2ஆவது திருமணம்... மாப்பிள்ளை இவரா..? தீயாய் பரவும் தகவல்... பின்னணி இதுவா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை மீனா. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு கோலிவுட் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார். 


மேலும் மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப பந்தத்தில் இணைந்து கொண்டார். இத்தம்பதிக்கு நைனிகா என்கிற ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.


மண வாழ்க்கையில் இணைந்த பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட மீனா, முக்கியமான வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார். மீனாவின் மகள் நைனிகாவும் விஜய்யின் 'தெறி' என்ற படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். 

மீனா திருமணம் செய்துகொண்ட பின்னரும்  அவரை படங்களில் நடிக்க அனுமதித்து அவருக்கு பெரும் பக்க பலமாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் காலமானார்.


கணவர் வித்யாசாகரின் மறைவால் மனமுடைந்து போன மீனா சில நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். பின்னர் அவரது நெருங்கிய தோழிகளின் முயற்சியால் அதிலிருந்து படிப்படியாக மீண்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். 

இந்த சந்தர்ப்பத்தில் தான் அவரது இரண்டாவது திருமணம் பற்றிய தகவல் ஒன்று தற்போது டோலிவுட் வட்டாரத்தில் காட்டுத் தீ போல் பரவி வந்தது. அதாவது மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்வதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். ஆனால் அவரது பெற்றோர் தான் நைனிகாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேறு திருமணம் செய்துகொள்ளுமாறு அவரை கடுமையாக வற்புறுத்தினார்களாம். 


இதனைத் தொடர்ந்து தான் அவர் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், விரைவில் குடும்ப நண்பர் ஒருவரை அவர் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் ஒன்று பரவியது. ஆனால் மீனாவின் நெருங்கிய வட்டாரத்தினர் தற்போது இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 

அந்தவகையில் மீனாவுக்கு மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் சுத்தமாக இல்லை என்றும், அவரது பெற்றோரும் அவரை 2ஆவது திருமணம் செய்துகொள்ளச் சொல்லி எப்போதுமே வற்புறுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து பரவும் இந்தத் தகவல் ஆனது வதந்தியாக இருக்கக் கூடும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement