• Apr 25 2024

சூப்பர் சிங்கர் பிரகதியா இது..? ஆளே மாறிப்போய் இப்படி உள்ளாரே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். ஜுனியர் மற்றும் சீனியர் என்றும் இரு பிரிவுகளாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது சீனியருக்கான போட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் சூப்பபர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் பிரகதி. இவர் பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். 

இதனை தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.

அதிலும் இவர் கிளாமராக உடை அணிந்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகும். அந்த வகையில் இவர் சமீபத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது என கேள்வி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..






Advertisement

Advertisement

Advertisement