• Mar 29 2024

திருச்சிற்றம்பலம் பட நடிகை நித்யா மேனனா இது?- குழந்தையிலும் செம கியூட்டாக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி, இன்று தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் பல அசத்தலான திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.


உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ், ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நித்யா மேனன் நடிப்பு, ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தது. மேலும் சமீபத்தில் இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.


இந்நிலையில், நித்யா மேனன் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருந்த காட்சிகள் தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.'ஹனுமான்' என்ற படத்தில், குழந்தை நட்சத்திரமாக தோன்றி இருப்பார் நித்யா மேனன். 

 அதில் க்யூட் குழந்தையாக வரும் நித்யா மேனன் காட்சியை பாடலுடன் இணைத்து எடிட் செய்து, தற்போது ரசிகர்கள் பலரும் Vibe செய்து வருகின்றனர். குழந்தையாக நடித்த போதே மிகவும் அழகாக நித்யா மேனன் இருக்கிறார் என்றும் ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement