“டிக்கிலோனா” படம் வெளியாகி மூன்று நாட்களில் இது தேவையா?- சந்தானத்தை கேலி செய்து வரும் ரசிகர்கள்

253

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக கலக்கி வந்தவர் சந்தானம். இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர் மனதைக் கொள்ளை கொண்டவர். மேலும் இவர் தற்பொழுது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார் என்பதும் தெரிந்ததே. இவர் நடிப்பில் சர்வர் சுந்தரம், சபாபதி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த 10 ஆம் தேதி ‘டிக்கிலோனா’ படம் நேரடியாக ரிலீசானது. சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான பாரீஸ் ஜெயராஜ் படம் சூப்பர் ஹிட்ட்டித்தது. A1 படத்தை இயக்கியிருந்த ஜான்சன் கே இந்த படத்தையும் இயக்கியிருந்தார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிக்கிலோனா படத்தில் அவருக்கு ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்பஜன் சிங், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் ‘டிக்கிலோனா’ படம் சுமாரான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும் இந்தப்படத்தில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்து நகைச்சுவை காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் படம் வெளியாகி மூன்று நாட்களில் படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி நடத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.