• Apr 19 2024

இப்படித்தான் காதலித்தார்களா விஜய் டிவி பிரபலங்கள்...வெளியான அவர்களின் வெடிங் டீசர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணுகாந்த். இவர் கடந்த சில வருடங்களாக அதே சீரியலில் நடித்த நடிகை சம்யுக்தா என்பவரை காதலித்து வந்த நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன் இருவருக்கும் திருமண செய்து கொண்டனர்.


திருமணம் குறித்த புகைப்படங்களை நடிகர் விஷ்ணுகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.



விஷ்ணுகாந்த் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான  ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை’ உட்பட ஒரு சில சீரியல்கள் நடித்துள்ளார் என்பது அதே போல் சம்யுக்தா 'நிறைமாத நிலவே’ என்ற வெப் தொடர் மூலம் பிரபலமாகி அதனை அடுத்து சில சீரியல்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இவ்வாறுஇருக்கையில் இவர்கள் இருவரது திருமண டீசர் வெளியாகி உள்ளது.அதில் அவர் சிப்பிக்குள் முத்து சீரியல் சூட் இடம்பெறும் போது சம்யுக்தாவை பார்த்ததாகவும் பின் இருவரும் பேசிக் கொண்டதாகவும் நேரடியாகவே விஷ்ணுகாந்த் அவரிடம் போய் கேட்டதாகவும் தனது காதல் கதையை கூறியுள்ளார்.

இதோ அந்த டீசர்...




Advertisement

Advertisement

Advertisement