தென்னிந்திய சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் தமிழில் சாணிக்காயிதம் என்னும் திரைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சார்க்காரு வாரிப்பட்டா என்ற திரைப்படம் நேற்று பிரமாண்டமாக வெளியாகியிருந்தது.

இந்நிலையில் பிஸியான நடிகையாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் ஆடம்பர உடை அணிவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். அதன்படி விருது வழங்கும் விழா ஒன்றிற்கு அவர் அணிந்தவந்த உடையின் மதிப்பு ரூ. 6 லட்சம் என தெரியவந்துள்ளது.

அந்த உடையில் போஸ் கொடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
