• Mar 25 2023

அனுஷ்காவின் உடல் எடை அதிகரிப்புக்கு இந்த இயக்குநர் தான் காரணமா?- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 1 month ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் அனுஷ்கா. இவர் இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தன் மூலமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.அதறடகு எடுத்துக் காட்டாக அருந்ததி, பாகுபலி போன்ற படங்களைக் கூறலாம்.

சினிமாவில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் நடிகை அனுஷ்கா கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின் கதைக்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கினார்.இவருக்கு  பட வாய்ப்புகள் அதிகரிக்க ஒரு பக்கம் உடல் வாய்ப்புகள் அதிகரித்தது. மேலும், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.


இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு பழைய வாய்ப்புகள் மீண்டும் சென்ற வண்ணம் இருந்தன. ஆனால், தற்போது  மீண்டும் உடல் எடை கூடியுள்ளது. சமீபத்தில் அனுஷ்காவின் சில லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.

அதில் ஸ்லிம் தோற்றத்தில் மாறி இருந்த அனுஷ்கா மீண்டும் கொழு கொழுவேன பப்லி தோற்றத்திற்கு மாறி இருந்தார்.மகா சிவராத்திரியை முன்னிட்டு அனுஷ்கா தனது தாயுடன் பெங்களூருவில் முன்னிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. அதில் அனுஷ்கா மிகவும் குண்டாக தெரிகிறார். உடனே நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் வடிவில் டிரோல் செய்ய ஆரம்பித்தனர்.


அனுஸ்கா இப்படி உடல் எடை கூடி இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் பலர் இஞ்சிஇடுப்பழகி (size zero) இயக்குநரை திட்டி தீர்த்து வருகின்றனர். அந்த படத்திற்காக தான் தீர்த்து உடல் எடையை கூட்டி இருந்தார். அதனால் தான் அனுஸ்காவிற்கு தற்போதும் உடல் எடை குறையாமல் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement