• Mar 23 2023

'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் மனைவியா இது...ஹீரோயின்களை மிஞ்சிடுவாங்க போல..தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 6 days ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்தவகையில் சமையலும் காமெடியும் கலந்த நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.இதுவரை 3சீசன்களை வெற்றிகரமாக கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.


மேலும் இதில் யாரும் எதிர்பாராத பல பிரபலங்கள் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, பிக்பாஸ் ஷெரின், வில்லன் நடிகர் காளையன், நடிகை விசித்ரா, பாக்கிய லட்சுமி சீரியல் நடிகர் விஷால், சிருஷ்டி டாங்கே... என  கூறிக்கொண்டே போகலாம்.

அதே போல் இந்த முறை, புதிதாக சில கோமாளிகளிலும் இனைந்துள்ளனர் . அதில் குறிப்பாக சிங்கப்பூர் தீபன், ஜிபி முத்து , மோனிஷா, ரவீனா தாஹா ஆகியோர் காமெடியில் பட்டையை கிளப்பி வருகிறார்கள்.


அத்தோடு இந்த நிகழ்ச்சி இவ்வளவு விறுவிறுப்பாக செல்ல முக்கிய காரணாம், நடுவர்களாக உள்ள செஃப் தாமு, மற்றும் வெங்கடேஷ் பட் எனலாம். ஒவொருவருடனும் மிகவும் ஈசியாக மிங்கில் ஆகி இவர்களுடன் காமெடி செய்து வருவருகிறார்கள். எனவே இவர்களுக்கான தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.


இவர்களை பற்றி தெரிந்த அளவிற்க்கு இவர்களின் குடும்பத்தினர் பற்றி அதிகம் தெரியாது. இவ்வாறுஇருக்கையில்  குக் வித் கோமாளி நடுவர்களின் ஒருவரான வெங்கடேஷ் பட், பிரபல தனியார் ஊடகம் ஒன்றில், மணிமேகலை தன்னுடைய கணவருடன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். 


தன்னுடைய மனைவி - மகள் ஆகியோருடன், வெங்கடேஷ் பட் கலந்து கொண்டபோது... மணிமேகலை இருவருக்கும் மாலை மாற்றி, மோதிரம் மாற்ற வைத்துள்ளார். இதில் இவரது மனைவியை பார்த்த ரசிகர்கள் “ வெங்கடேஷ் பட் மனைவியா இது...ஹீரோயின்களை மிஞ்சிடுவாங்க போல...” என பதிவிட்டு வருகின்றனர். 



Advertisement

Advertisement

Advertisement