• Apr 25 2024

அஜித்தின் “விடாமுயற்சி” லுக்கா இது? வைரலாகும் லண்டன் புகைப்படம்

Jo / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விடாமுயற்சி’ என்ற படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .அதற்காக இருவரும் லண்டன் சென்றிருக்கிறார்கள் என தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் அஜித் லண்டன் சென்று இருக்கும் நிலையில் அங்குள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

மேலும் இந்த புகைப்படத்தில் இருக்கும் தோற்றம்தான் அஜித்தின் ’விடாமுயற்சி’ கெட்டப் என்றும் கூறப்படுகிறது. இந்த கெட்டப் அட்டகாசமாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் மேலதிக தகவல்களுக்காக காத்திருப்போம்.


Advertisement

Advertisement

Advertisement