• Mar 29 2024

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததற்கு இப்படி ஒரு அரசியல் உத்தி இருக்கின்றதா?- உண்மையைச் சொன்ன பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

திரைத்துறையை பொறுத்தவரை உலகிலேயே மிகவும் உயரிய விருதான ஆஸ்கார் விருது இந்த வருடம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. டால்பி தியேட்டரில் நடைபெற்ற இதில், ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. 

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தப் பாடல், தற்போது ஆஸ்கரையும் வென்றுள்ளது.


பல மொழி பாடல்களுக்கு மத்தியில் நாட்டு நாட்டு பாடல் வெற்றிபெற்றதை அடுத்து இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். விருதை வாங்கிய கீரவாணி இந்த விருதை நம் இந்திய ரசிகர்கள் அனைவர்க்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.மேலும் இந்த விருதுக்கு காரணமான அனைவருக்கும் பாட்டின் மூலம் நன்றியை தெரிவித்தார் கீரவாணி.

 இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி ஆஸ்கார் விருதில் நடக்கும் அரசியல் பற்றி பேசியுள்ளார். அதாவது ஒரு திரைப்படம் அயல்நாட்டை சார்ந்தவர்களை ஹீரோ ஜெயிப்பது போன்ற கதையம்சம் கொண்டிருந்தால் அந்த படத்தை அவர்கள் ஆதரிக்கமாட்டார்களாம். மேலும் அப்படத்திற்கு விருதுகளும் கிடைக்காதாம். இதே போல தான் அமீர்கான் நடிப்பில் வெளியான லகான் படத்திற்கும் நடந்துள்ளது என சுட்டிக்காட்டி பேசினார் பிஸ்மி.


அப்படத்தில் நாயகன் ஆங்கிலேயர்களை ஜெயிப்பது போன்ற கதையம்சம் கொண்டதால் தான் லகான் படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும் எந்த விருதும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார் பிஸ்மி. இதைக்கேள்வி பட்ட ரசிகர்கள் அனைவரும் ஆஸ்கார் இதுபோன்ற பாரபட்சத்தை பார்ப்பது தவறான ஒன்று என தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement