• Apr 20 2024

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாதா?- ஆச்சரியத்தில் கமல்ஹாசன்- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


21 போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் ஆரம்பமாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனால் பார்வையாளர்களும் சலிப்படையாமல் பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வீட்டிலிருந்து ஜிபி முத்து ,சாந்தி மாஸ்டர், அசல் ஆகியோர் இதுவரை வெளியேறியுள்ளனர். மேலும் இன்றும் நாளும் கமல்ஹாசன் எப்பிஷோட் என்பதால் போட்டியாளர்கள் தம்மை தயார்ப்படுத்தியும் வருகின்றனர்.


மேலும் இந்த வாரம் குறைவான வாக்குகளை ஷெரினா பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் இன்றைய எப்பிஷோட்டில் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்டிடம் யார் எலிமினேட் ஆவாங்க என்று கேட்டார்.

அதற்கு மைனா நந்தினி இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று கூறினார். இதனால் ஆச்சரியமடைந்த கமல் ஏன் என்று கேட்கும் போது. நாளைக்கு உங்க பிறந்தநாள் சேர் அதலான எலிமினேஷன் கிடையாது என்று கூற பிறந்தநாளுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டு சிரித்துள்ளார்.

ஆனால் எது எப்படி இருந்தாலும் இந்த வாரம் எலிமினேஷன் கட்டாயம் இருக்கும் என்பதோடு ஷெரினா தான் வெளியேறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement