• Apr 20 2024

புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலின் சிக்னேச்சர் ஸ்டெப்பிற்கு இப்படி ஒரு ரகசியம் இருக்கா?- உண்மையை உடைத்த அமிதாப்பச்சன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் புஷ்பா.இப்படத்தில் கதாநாயனாக அல்லு அர்ஜுன் நடித்திருந்ததோடு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் சிறப்புத் தோற்றத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி அசத்தியிருந்தார்.தெலுங்கில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், பேன் இந்தியன் படமாக வெளியாகி, இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் பல வசூல் சாதனைகளையும் புரிந்திருந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாரகவுள்ளது.இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தது.ஸ்ரீவள்ளி, ஓ அண்டவா மாமா, சாமி சாமி உள்ளிட்ட அனைத்து பாடல்களும் வேற லெவலில் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது.

இந்நிலையில், ஸ்ரீவள்ளி பாடலில் வரும் பிரபல ஸ்டெப் குறித்து, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தற்போது ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ஸ்ரீவள்ளி பாடலில், அல்லு அர்ஜுன் செருப்பு கழண்டு விழுவது போல ஒரு ஸ்டெப் இடம்பெற்றிருக்கும். இது மிகவும் பிரபலம் ஆனதால், பலரும் இதனை ரீல்ஸ் செய்து வீடியோவாகவும் வெளியிட்டனர்.

இதனிடையே, சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட 'குரோர்பதி' நிகழ்ச்சியில் ஸ்ரீவள்ளி பாடல் குறித்து அசத்தலான சீக்ரெட் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். ஒருமுறை ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த சமயத்தில், ஸ்ரீவள்ளி பாடலில், செருப்பை தூக்கி, அல்லு அர்ஜுன் போடுவது பற்றி, அமிதாப்பச்சன் இயக்குநருடன் கேட்டுள்ளார்.அதாவது, அது தற்செயலாக நடந்ததா அல்லது நடன ஸ்டெப்பா என கேட்டுள்ளார்.

அப்போது, அல்லு அர்ஜுன் நடனமாடும் போது, தவறுதலாக செருப்பை அல்லு அர்ஜுன் விட்டதாகவும், அதுவே பின்னர் சிறப்பாக இருந்ததால் இயக்குநர் சரி என சொல்லி விட்டதாகவும், பின்னர் அந்த ஸ்டெப் வைரல் ஆகவே, பலரும் அதனை ரீல்ஸாக செய்து பிரபலம் ஆக்கவும் செய்திருந்தனர்.

புஷ்பா படத்தில், ஸ்ரீவள்ளி பாடலில், ஹிட்டடித்த ஸ்டெப் தொடர்பாக தற்போது அமிதாப்பச்சன் தெரிவித்துள்ள சுவாரஸ்யமான சீக்ரெட் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement