• Apr 19 2024

மனோபாலாவின் உடலை ஏற்றிச் சென்ற இறுதி ஊர்வல வண்டியின் விலை இத்தனை லட்சமா?- வண்டிக்குள்ள இத்தனை வசதிகள் இருக்கின்றதா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

பாரதிராஜாவின் முக்கியமான உதவி இயக்குநர்களில் ஒருவர் மனோபாலா. புதிய வார்ப்புகள் படத்தில் தொடங்கி டிக் டிக் டிக், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர் 1982ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக மாறினார்.அதனைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களையும், கன்னடத்தில், ஹிந்தியில் தலா ஒரு படத்தையும் அவர் இயக்கி வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார்.

2002ஆம் ஆண்டு நைனா படத்தை இயக்கிய அவர் சில சீரியல்களையும் இயக்கியிருக்கிறார். அதனையடுத்து இயக்கத்தை மூட்டை கட்டிவிட்டு நடிப்பு பக்கம் சென்றா மனோபாலா. நடிப்பு துறையிலும் தனது முத்திரயை வெகு சீக்கிரமாகவே பதித்துவிட்டார் அவர். இதனால் அவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு, விவேக், சந்தானம் உள்ளிட்டோருடன் அவர் செய்த காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பியவை.


பல படங்களில் நடித்திருந்த மற்றும் நடிக்க கமிட்டாகியிருந்த மனோபாலாவுக்கு கடந்த கல்லீரல் பிரச்னை உருவானது. அதோடு அவ்வப்போது நெஞ்சு வலியும் இருந்திருக்கிறது. இதனையொட்டி சென்னை அப்போலோவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சூழலில், சில காரணங்களால் அவர் வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்.

சிகிச்சை பலனின்றி எல்.வி.பிரசாத் ரோட்டில் இருக்கும் அவர் வீட்டில் மனோபாலாவின் உயிர் நேற்று பிற்பகல் பிரிந்தது. அவரது இந்த மரணம் மிகப்பெரிய சோகத்தை கோலிவுட்டுக்கு கொடுத்திருக்கிறது. சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி இரங்கலை தெரிவித்தனர்.


இப்படியான நிலையில் இவருடைய உடலை ஏற்றிச் சென்ற பென்ஸ் ஆம்புலன்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஆம்புலன்ஸின் விலை 43 லட்சமாம். இதே போல ட்ரெண்டுக்கு விடுவதென்றால் முப்பதாயிரம் வாங்குவார்களாம். ஆனால் மனோபாலா சிறந்த காமெடி நடிகர் என்பதால் அவருக்கு இலவசமாக இந்த சேவையை செய்துள்ளதாக அந்த வண்டியின் ஓனர் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறியதாவது எங்களுக்கு இந்த வண்டியில் ஏற்றிச் செல்லும் ஆன்மா அமைதியான முறையில் செல்ல வேண்டும் என்பதற்காக தான் இவ்வளவு செலவு செய்து இந்த வாகனத்தை தயார் செய்துள்ளதாகவும் இந்த வண்டியைத் தயார் செய்த ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ளதாகவும் மனோபாலாவுக்கு மட்டுமன்றி பலருக்கும் இந்த வாகனத்தின் மூலம் தமது சேவையை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement