• Apr 20 2024

நடிகர் ஷாருக்கான் வீட்டில் வைக்கப்பட்ட பெயர்ப்பலகை இத்தனை லட்சம் பெறுமதி வாய்ந்ததா?- வைரக்கற்கள் பொறிக்கப்பட்டுள்ளதாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் தான் ஷாருகான். இவரு்கு ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்த வகையில் இவர் தற்பொழுது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதோடு கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.


ஷாருக்கானுக்கு மும்பையில் மன்னத் என்ற பெயர் உள்ள மிகப்பெரிய வீடு உள்ளது அனைவருக்கும் தெரிந்தது தான். அந்த வீட்டின் பெயர் பலகையை ஷாருக்கானின் மனைவி புதியதாக வடிவமைத்துள்ளார்.


அதாவது மன்னத் என்ற பெயர் சுற்றி வைரக் கற்கள் பொறிக்கப்பட்டுள்ளதாம். அந்த புதிய பெயர் பலகை பக்கத்தில் நின்று கௌரிகான் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.அந்த பெயர் பலகைக்கான செலவு மட்டும் ரூ. 35 லட்சம் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement