“சார்பட்டா பரம்பரை ”திரைப்படம் வசூல் இத்தனை கோடியா?அதிர்ந்த திரையுலகம்

260

நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. குறிப்பாக மாரியம்மா கதாபாத்திரம் அதிகளவில் பேசப்படுகிறது. அதே போல் இதில் ஆர்யாவின் பங்கு முக்கிய இடம்வகிக்கிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தில், பசுபதி, ஜான் கொக்கன், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான இத்திரைப்படம் 1975 காலகட்டத்தில் வட சென்னையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓடிடி-யில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சுமார் ரூ. 14 கோடி லாபம் கொடுத்துள்ளதாம். மேலும், ரூ. 24 கோடிக்கு உருவான இப்படம் சுமார் ரூ. 38 கோடிக்கு மொத்த பிசினஸ் செய்துள்ளதாம்.
சார்பட்டா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.