தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக நடிகராக அறிமுகமாகி தனக்கென்று முக்கிய இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் சிம்பு.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இவரின் மார்க்கெட்டை அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு ,பத்து தல போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.
சிம்பு தற்போது சமூக வலைத்தளங்களில் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளிநாட்டில் இருக்கும் ஸ்டில்கள் சிலவற்றை பகிர்ந்து இருந்தார். மேலும் அது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
மேலும் அந்த புகைப்படத்தில் சிம்பு அணிந்திருந்த ஜாக்கெட் விலை விவரம் தான் ரசிகர்களுக்கு இப்போது ஷாக் கொடுத்து இருக்கிறது.

Dolce & Gabbana என்ற நிறுவனத்தின் அந்த ஜாக்கெட் விலை மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாயை விட அதிகம். இதை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.