• Apr 23 2024

இந்திய சினிமாவை அதிர வைத்த ”பதான்” படத்தின் தற்போதைய வசூல் இத்தனை கோடிகளா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான “பதான்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது வருகிறது. 

9 நாட்களை கடந்தும் படம்  இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் வெளியான இந்த திரைப்படத்தை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.  படத்தில் ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், பதான் திரைப்படம் வெளியான 9 நாட்களில் உலக முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் உலகம் முழுவதும் 696 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 436 கோடி எனவும். வெளிநாடுகளில் 260 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது இந்தி சினிமாவில் மிகப்பெரிய சாதனை என்றே கூறலாம். ஏனென்றால், இந்தி மொழியில் வெளியான எந்த படமும் வெகு விரைவில் இத்தனை கோடி வசூல் செய்ததே இல்லை. மேலும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Advertisement

Advertisement

Advertisement