• Jan 27 2023

துணிவு படத்தில் முதலில் நடிக்க இருந்தது அந்த மாஸ் ஹீரோ தானா?- வெளியான ஷாக் தகவல்

Listen News!
stella / 2 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் துணிவு. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம்  இந்த மாதம் 11ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்திருக்கும் நிலையில் முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது இப்படத்தின் இயக்குநர்  சதுரங்க வேட்டை படத்தை முடித்த கையோடு துணிவு படத்தின் கதையை நடிகர் சூர்யாவிடம் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.


சூர்யாவுக்கும் கதை பிடித்து போன நிலையில் வினோத் அதற்குள் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்ததும் அஜித் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லவே இந்த கதை அஜித்துக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.

எனவே இப்படத்தின் இயக்குநரான எச். வினோத் பெரும்பாலும் அடுத்த படத்தை சூர்யாவை வைத்தே இயக்குவார் என்று ரசிகர்களால் நம்பப்படுகின்றது. அத்தோடு இப்படத்தில் அஜித் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடததக்கது.


Advertisement

Advertisement

Advertisement