• Mar 28 2024

ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட நடிகை தமன்னா?-இணையத்தில் ட்ரெண்டிங்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சனும், ரஜினியும் இணையும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு அறிவிப்பு வெளியானது.மேலும் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதனால் ஜெயிலர் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.சென்னையில் தொடங்கிய ஜெயிலர் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. அதில் ஜெயில் செட் போட்டு பல காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது.


இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருந்து நடிகை தமன்னா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் மற்றும் அவருடைய படக்குழுவினர் இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு கட்டடத்துக்குள் தனது படக்குழுவுடன் இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் நிச்சயம் இது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோதான் என கூறிவருகின்றனர்.இதனை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement