• Apr 19 2024

சூரியின் விடுதலை சிம்புவுக்கு சிக்கலா? விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் மீண்டும் தள்ளாட்டம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தான் தவறவிட்ட பெயரையும், புகழையும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் திரும்பப் பெற்றே தீர வேண்டும் என்று ரொம்பவும் முனைப்புடன் செயல்பட்டு வரும் நடிகர் தான் சிம்பு.அந்த வகையில் இவர் தற்பொழுது இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.இப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் முக்கிய கதாப்பாத்திரத்தில நடித்து வருகின்றார்.


ஆளில்லா தனிக்காட்டு ராஜாவாக மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ரிலீஸ் செய்து வெற்றி பெற்ற சிம்புவுக்கு பெரிய தலைவலியாக பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் அமைந்துவிட்டது. இதற்கு காரணம் நடிகர் சூரி முதன் முதலில் ஹீரோவாக நடிக்கும் விடுதலை திரைப்படமும் மார்ச் 30 இல் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது.

காமெடி நடிகர் சூரியின் திரைப்படம் தானே என்று அவ்வளவு ஈசியாக சிம்புவால் இருந்து விட முடியாது. ஏனென்றால் விடுதலை, இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்படம். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.


விடுதலை திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. பத்துதல மற்றும் விடுதலை திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது கோலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்றாலும், நடிகர் சிம்புவுக்கு சிக்கல் தான். மீண்டும் வளர்ந்து வரும் நேரத்தில் இதுபோன்ற போட்டிகளால் அவருடைய மார்க்கெட் கொஞ்சம் தள்ளாடவும் வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement