போயும் போயும் பணத்துக்காக இப்படி ஒரு முடிவா? குடும்பத்தவர்கள் பெருமைப்படுவார்களா..சமந்தா மீது கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

1306

தென்னிந்திய சினிமாவில் தமது சிறந்த நடிப்பினால் தமக்கென்று ஓர் இடத்தைப்பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கிய நடிகையாக வலம் வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதியடன் இணைந்து காத்து வாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. பெரியளவில் எடுக்கப்படும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரே ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு குத்தாட்டம் போட தயாராகியுள்ளாராம் என தகவல் வெளியாகி நிலையில் அவர் மீது ரசிகர்கள் பல கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

அதாவது போயும் போயும் பணத்துக்காக இப்படி குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டாரே சமந்தா என்கிறார்கள் ரசிகர்கள்.

முன்னதாக படங்கள் பற்றி சமந்தா கூறியதாவது,

எனக்கு மன நிறைவு கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன். பணத்துக்காக இல்லாமல் நல்ல கதாபாத்திரங்களுக்காக நடிக்க விரும்புகிறேன். நான் நடிக்கும் கதாபாத்திரங்களை பார்த்து என் குடும்பத்தார் பெருமைப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் குத்தாட்டம் போடுவதை பார்த்து குடும்பத்தார் பெருமைப்படுவார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் சமந்தாவுக்கு பாலிவுட் செல்லும் ஆசை வந்திருக்கிறது.

மேலும் நல்ல ஸ்க்ரிப்ட் கிடைத்தால் நிச்சயம் பாலிவுட் படத்தில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.பாலிவுட் படங்களில் நடிக்க வசதியாக மும்பையில் வீடு வாங்குகிறாராம் சமந்தா.