• Apr 20 2024

தளபதி 67 படத்தின் மெயின் வில்லன் சிம்பு தானா?- அப்போ சூர்யா,அர்ஜுன் கிடையாதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. இதனால் இனிமேல் என் படங்களில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இருக்கும் என லோகேஷ் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் தளபதி 67 படமும் LCU கான்செப்ட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் இன்னும் தாறுமாறான எதிர்பார்ப்பில் உள்ளது தளபதி 67. இந்நிலையில் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் பிப்ரவரி 1 முதல் 3ம் தேதிக்குள் வெளியாகும் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது. 


அதேபோல் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோர் கமிட் ஆகியுள்ளார்களாம். சில தினங்களுக்கு முன்னர் தளபதி 67 ஷூட்டிங்கில் கலந்துகொண்டதை உறுதி செய்திருந்தார் மிஷ்கின்.அதேபோல் இரு தினங்களுக்கு முன் தளபதி 67ல் நடிக்கும் அர்ஜுனின் கெட்டப்பும் வெளியாகி வைரலானது.

 இதனிடையே தளபதி 67 அப்டேட்டை விக்ரம் படத்துக்காக எடுக்கப்பட்ட டைட்டில் ப்ரோமோ மாதிரி வெளியிட லோகேஷ் முடிவு செய்துள்ளாராம்.இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி சிம்பு தான் மெயின் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. பத்து தல சூட்டிங் முடித்துவிட்ட சிம்பு, அவரது அடுத்தப் படம் குறித்து அறிவிக்காமல் சைலண்டாக இருக்கிறார். 


இதனால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தளபதி 67 ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது ஆதாரமற்ற தகவல் என்றும், சிம்பு தளபதி 67ல் நடிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் வாரிசு படத்தில் 'தீ தளபதி' என்ற பாடலை சிம்பு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement