• May 29 2023

விஜய்யின் அடுத்த ஜோடி இவர் தானா?...தளபதி 68ல் நடிக்க ஓகே சொல்லுவாரா டாப் நடிகை...!

Jo / 1 week ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்காக விஜய் ரூ. 125 கோடி சம்பளம் வழங்க உள்ளாராம். வெங்கட் பிரபு தன்னுடைய படங்களில் எப்போதுமே தனது தம்பிகள் பிரேம்ஜி மற்றும் யுவன் இருவரையும் கமிட் செய்வார்.ஆனால், தளபதி 68 படத்திற்கு யுவன் இசையமைக்க போவதில்லை என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களும் சற்று அப்செட்டில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். சம்பளம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர் தயாராக இருக்கிறார்களாம்.

ஆனால், நயன்தாராவின் கால்ஷீட் இல்லை என்றும் இதனால் தளபதி 68 படத்தில் அவர் நடிப்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் நயன்தாரா இப்படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்று.


Advertisement

Advertisement

Advertisement