• Apr 25 2024

சந்திரமுகி 2-வில் ஜோதிகாவுக்கு பதில் இவரா..?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சந்திரமுகி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்மொழித் திரைப்படமாகும். பி. வாசு இதன் இயக்குனர் ஆவார். இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு நடித்துள்ளனர். 


 இந்தப் படம் கன்னடம் படமான அபாமித்ராவின் ரீமேக் ஆகும், ஆனால் அபமித்ரா, மலையாளப் படமான மணிசித்ரதாழுவின் ரீமேக்காக இருந்தது.


இத்திரைப்படத்தில் வரும் சந்திரமுகியின் அழகான ஓவியம் ராஜா என்ற இளைஞனால் வரையப் பெற்றது. மேலும் இப்படம் 1999-ல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.


தற்போது 17 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க மறுத்துவிட்டதால், அவருக்கு பதில் லாரன்சை நடித்து வருகிறார். 


வடிவேலு, ராதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடிக்க மறுத்துவிட்டதால் அவருக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


இந்நிலையில், தற்போது அது யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தான் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்க உள்ளாராம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement