• Apr 25 2024

லவ் டு டே பட இயக்குநர் பிரதீப் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தான் படம் எடுக்கவுள்ளாரா?- அதிரடியாக வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அண்மையில் வெவளிவந்து இளைஞர்களால் பாராட்டப்படும் படமாக ஓடிக் கொண்டிருப்பது தான் லவ் டுடே. இப்படத்தை இளம் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார். இப்படத்தின் மூலமே இவர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

மேலும் இவர் ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கியிருந்தார். கோமாளி படம் பெற்ற வெற்றியை விட லவ் டுடே படம் வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.


மேலும் இவர்  அடுத்ததாக என்ன செய்ய போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.நேற்று நடந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட விஜய்யுடன் பிரதீப் ரங்கநாதன் கைகோர்ப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதீப், விஜய் சாருக்கு கதை சொல்லிருக்கேன், ஆனால், இப்போ அதை பத்தி பேச கூடாது. விரைவில் அதை பற்றி கண்டிப்பாக பேசுவோம். என்று கூறியுள்ளார் பிரதீப். இதனால் விஜய்யை வைத்து இவர் படம் இயக்குகின்றாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement