• Apr 20 2024

காஷ்மீரைத் தொடர்ந்து லியோ ஷுட்டிங் இந்த ஊரில் தான் நடக்கவுள்ளதா?- சூப்பர்ல- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குநர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது.


 இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி இருந்தனர்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்திருந்தார். இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில்,  "நன்றி சஞ்சய் தத் சார், நீங்கள் மிகவும் இனிமையாகவும், தன்னடக்கமான மனிதராகவும் இருந்தீர்கள். எங்களின் ஒட்டுமொத்த குழுவும் உங்கள் நடிப்பை மிகவும் அருகிலேயே பார்த்து மகிழ்ந்தோம், நீங்கள் வழக்கம் போல் மிரட்டி விட்டீர்கள் சார்.


 சென்னை ஷெட்யூலில் மீண்டும் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார்" என பதிவிட்டுள்ளனர். காஷ்மீர் படப்பிடிப்புக்கு பிறகு சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று இதன்மூலம் உறுதி ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..


Advertisement

Advertisement

Advertisement