• Jun 04 2023

தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் கண்மணிக்கும் வெற்றியின் இரண்டாவது அண்ணனுக்கும் தான் திருமணமா?- அப்போ சித்ராவின் நிலை என்ன?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து எனனைத் தொடும்.இந்த சீரியலில் வர வர அபயும் வெற்றியும் மோதிக் கொள்வது அதிகரித்துக் கொண்டே போகின்றது.

அபி வருணைக் காதலித்து திருமணம் செய்து விட்டதாக எண்ணி கண்மணியை வெற்றி கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டார். கண்மணி வெற்றி அடைந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பல சூழ்ச்சிகளையும் செய்து வருகின்றார் கண்மணியின் சூழ்ச்சி தெரியாமல் வெற்றியும் அவரது குடும்பமும் சிக்கி விட்டது.


அபியை வெற்றியொடு சேரவிடாமல் பண்ணினாலும் சுடர் வெற்றியுடன் பழகுவதை கண்மணியால் தடுக்க முடியவில்லை. அத்தோடு வெற்றியை எப்படியாவது திருமணம் செய்தே ஆகவேண்டும் என கண்மணி பல தில்லாலங்கடி வேலைகளையும் செய்து வருகின்றார்.

மேலும் இதில் கண்மணி என்னும் கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமான ஜுலி தான் நடித்து வருகின்றார்.நெக்கட்டிவ் ரோலில் நடித்தாலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் கண்மணி வெற்றியின் அண்ணாவாக நடித்து வரும் ராஜ் குமாருடன் மாலை அணிந்த படி போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் வெற்றிக்கும் கண்மணிக்கும் திருணம் இல்லையா எதற்காக இந்த போட்டோ எடுக்கப்பட்டது என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement