• May 29 2023

பசங்க பட இயக்குநருக்கே பாயாசமா? பாண்டிராஜனிடம் சுமார் 2 கோடி பண மோசடி..! வெளியான பரபரப்பு தகவல்..!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

ஏற்கனவே நிலம் விற்பனை விவாகரத்தில் தான் நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால் இடையே பெரிய பஞ்சாயத்தே ஆனது.

இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜனை நம்ப வைத்து குமார் என்பவர் கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ளாராம்.

பசங்க முதல் எதற்கும் துணிந்தவன் வரை: புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்த பாண்டிராஜன் கடந்த 2009ம் ஆண்டு பசங்க படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.

விமல் நடித்த அந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, அருள்நிதி, சுனைனாவை வைத்து வம்சம் படத்தை இயக்கினார்.

சிவகார்த்திகேயனை வைத்து மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களை இயக்கிய பாண்டிராஜன் பசங்க 2 படத்தை நகரத்தை சுற்றிய கதையாக உருவாக்கி இருந்தார். அந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.சிம்புவையும் நயன்தாராவையும் மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் நடிக்க வைத்திருந்தார். விஷால் உடன் இணைந்து கதகளி ஆடிய பாண்டிராஜன் கார்த்தி உடன் இணைந்து இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நம்ம வீட்டுப் பிள்ளை படத்தை இயக்கிய பாண்டிராஜன் கடந்த ஆண்டு சூர்யா, பிரியங்கா மோகனை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கினார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஹிட் அடிக்கவில்லை.

இந்நிலையில், இயக்குநர் பாண்டியராஜனிடம் நிலம் விற்பனை செய்வதாக ஏமாற்றி 1 கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த குமார் என்பவர் மோசடி செய்துள்ளதாக பாண்டிராஜ் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில், தற்போது புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த குமாரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எதற்கும் துணிந்தவன் படம் சொதப்பிய நிலையில், ஒரு வருஷம் ஆகியும் இன்னமும் இயக்குநர் பாண்டிராஜன் தனது அடுத்த படத்தை தொடங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement