• Apr 25 2024

குழந்தை பிறந்த பிறகும் இப்படியா... ரசிகரின் மோசமான கேள்விக்கு சூப்பர் பதிலளித்த பிரணிதா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் பிரணிதா சுபாஷ். சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவர் கடந்த 2021 -ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரணிதா சுபாஷ் தற்போது ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில்   ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அவரது குழந்தை புகைப்படம் மற்றும்  வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.  அவ்வப்போது தனது ரசிகர்களோடு கலந்துரையாடுவார்.


இவ்வாறுஇருக்கையில், குழந்தை பராமரிப்பு பற்றிய கேள்விகளை கேளுங்கள் என தனது பாலோவர்ஸிடம் கேட்டிருந்தார் பிரணிதா. அப்போது ஒரு நபர், "குழந்தை பிறந்த பிறகும் எப்படி இவ்ளோ ஹாட்டாக இருக்கிறீர்கள்" என கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த பிரணிதா, ”நான் இந்த QA செக்ஷன் நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தேன், ஆனால் நீங்கள் இங்கு வந்து தவறான கேள்வி கேட்கிறீர்கள்" என பதிலடி கொடுத்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement