• Apr 24 2024

அது எல்லாம் பொய்யா: புதுப்பொண்ணு ஹன்சிகாவுக்கு வந்த திடீர் சோதனை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விரைவில் திருமதியாகவிருக்கும் ஹன்சிகா, சொஹைல் கதூரியாவின் மார்ஃபிங் புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாய் பரவிக்கொண்டு இருக்கிறது.

 தன் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சொஹைல் கதூரியாவை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் ஹன்சிகா. அவர்களின் திருமணம் ஜெய்பூர் அரண்மனையில் டிசம்பர் 4ம் தேதி இடம்பெற உள்ளது.


திருமண நிகழ்ச்சிகள் டிசம்பர் 2ம் தேதியே ஆரம்பமாகிறது.ஹன்சிகாவின் திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் தான் கலந்து கொள்கிறார்களாம்.

இவ்வாறுஇருக்கையில்  ஹன்சிகா, சொஹைல் கதூரியா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வந்தது. அதை பார்த்த ரசிகர்களோ, ச்சோ க்யூட் என்றார்கள்.

hansikaஅந்த புகைப்படம் ஹன்சிகாவின் கண்ணிலும் பட்டது. உடனே அவர், இது போலி புகைப்படம் என விளக்கம் கொடுத்துள்ளார்.


இதற்கிடையே ஹன்சிகாவின் வருங்கால கணவரான சொஹைல் கதூரியாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது தெரிய வந்திருக்கிறது.அத்தோடு முன்னதாக ரிங்கி என்கிற பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சொஹைல்.



மேலும்  அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகா கலந்து கொண்டு டான்ஸ் ஆடியிருக்கிறார். நீச்சல் குளம் அருகே ஹன்சிகா டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகியிருக்கிறது.ரிங்கியுடன் அமர்ந்து ஹன்சிகா போஸ் கொடுத்த புகைப்படமும் வெளியாகி சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement