• Mar 27 2023

Giftஆக வந்த கிளியை வளர்த்தது குற்றமா?- ரோபோ ஷங்கருக்கு இத்தனை லட்சம் அபராதமா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் அவரது வீட்டில் இரண்டு கிளிகளை வளர்த்து வந்த நிலையில் அதை சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் பறிமுதல் செய்து கிண்டியில் இருக்கும் சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர். அனுமதி இல்லாமல் அலெக்சாண்டரியன் ரக கிளிகளை வீட்டில் வளர்த்து வந்த ரோபோ ஷங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரோபோ சங்கர் “இந்த கிளிகளை நாங்கள் பல காலமாக வளர்த்து வருகிறோம் ஒருநாள் இரண்டு நாள் கிடையாது மூன்றரை ஆண்டுகளாக வளர்த்து வருகிறோம். நாங்கள் இதனை வனத்துறையிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை.


இந்த கிளிகளை நாங்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை இது என்னுடைய தோழி ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார் அவர் பரிசாக கொடுத்துதான் அது. எங்களுக்கும் கிளிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் தான் அவற்றிற்கு பிகில், ஏஞ்சல் என்று பெயர் வைத்து வளர்த்தோம், அவையும் எங்களை அக்கா, அம்மா என்றுதான் பேசும். குறிப்பாக என்னுடைய கணவரை ரோபோ சங்கர் என்று தான் கூறும்.

கடந்த மூன்றறை ஆண்டுகள் இந்த கிளிகளை எங்களின் குழந்தைகள் போன்று தான் வளர்த்து வந் தோம். பரிசாக கிடைத்த கிளி என்பதினால் நாங்கள் அனுமதி பெறவில்லை, கிளி போலத்தான் நாங்கள் வனத்துறையிடமும் சொல்லவில்லை. தற்போது நாங்கள் இலங்கையில் உள்ளோம்  நாங்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து கிளிகளை எடுத்து சென்றிருக்கின்றனர். நாங்கள் ஊருக்கு வந்ததும் இதை பற்றி விளக்கமளிக்கவுள்ளோம் என்று கூறினார் பிரியங்கா.


கிளிகளை வளர்த்து வருவது எப்பிடி தெரிந்தது என்று தெரியவில்லை, சமீபத்தில் தனியார் ஊடகங்கம் ஹோம் டூர் மற்றும் குக்கிங் வீடியோ எடுத்தார்கள் அதில் கிளிகள் இருந்தன வீடியோ வேளை அதனால் தெரிந்திருக்கலாம். கிளிகளை மறைக்கும் எண்ணம் எங்களுக்கு இருந்தால் நாங்கள் ஏன் வீடியோவில் கிளிகளை காட்ட போகிறோம். பிகிலும் ஏஞ்சலும் இல்லாதது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் வனத்துறையினர் அவர்களது வேலையை தான் செய்திருக்கின்றனர்.

அவை இப்போது இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறினார் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா. இப்படி ஒரு நிலையில் கிளிகளை அனுமதியின்றி வளர்த்ததற்காக ரோபோ ஷங்கருக்கு 2.5 லட்சம் ருபாய் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய தொகை என ரோபோ ஷங்கரின் மனைவி தெரிவித்து இருக்கிறார்.


"கிப்ட் ஆக வந்த கிளி என்பதால் தான் அனுமதி வாங்கவில்லை. இதை மறைக்க வேண்டும் என நினைக்கவில்லை"இந்தத் தொகையை கட்டுவது கஷ்டம்தான். ஆனாலும், அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்போம் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement