• Jun 04 2023

விஜய்க்கு இப்படி ஒரு ரசிகரா.. அசந்து போய் மாஸ்டர் நடிகர் மகேந்திரன் வெளியிட்ட வீடியோ..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் காட்சியை திருவிழா போல கொண்டாடுவார்கள்.

சமீபத்தில் விஜய்யை பார்க்க வேண்டும் என சிறுமி ஒருவர் விஜய் வீட்டின் கேட் அருகில் இருக்கும் கேமராவில் பேசிய வீடியோ வைரல் ஆனது. அதை தொடர்ந்து விஜய்யும் சிறுமியிடம் போனில் பேசி, அதன் பின் நேரில் சந்தித்தார்.

இந்நிலையில் மாஸ்டர் பட புகழ் நடிகர் மகேந்திரன் பெட்ரோல் பங்கில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கை இழந்த நிலையிலும் அவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருக்கிறார். தனது போனில் அவர் விஜய் படம் இருக்கும் கவர் தான் போட்டிருக்கிறார் அவர். மேலும் விஜய்யை சந்திக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசையில் இருந்தும் சந்திக்க முடியவில்லை என கூறி இருக்கிறார்.  

Advertisement

Advertisement

Advertisement