• May 29 2023

அப்பத்தாவை கொலை செய்யத் திட்டம் போடுகிறாரா குணசேகரன்..? காணாது தவிக்கும் ஜனனி... கலக்கத்துடன் கதிர்... விறுவிறுப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.


அதில் ஜனனி சக்தியிடம் "இல்லை ஷக்தி அப்பத்தாவை இங்க கூட்டிற்று வரல, நம்மள சுத்த விடுறதற்காகத் தான் இந்தப் பிளான்" எனக் கூறுகின்றார்.


மறுபுறத்தில் குணசேகரன் "எங்க அப்பத்தா உயிர் அவ உடம்பில இல்லம்மா, உன் கையில தான் இருக்கு" எனக் கூறுகின்றார். அதற்கு அந்தப் பெண் "ரொம்ப நன்றாகப் பார்த்துக்கிறேன் சார்" எனக் கூறுகின்றார். அதற்கு குணசேகரன் "ரொம்ப நல்லாய்ப் பார்க்க வேணாம், ஓரளவுக்கு பார்த்தால் போதும்" எனக் கூறுகின்றார். இதன் மூலமாக அவரின் வில்லத்தனத்தின் உச்சம் வெளிப்பட்டு நிற்கின்றது.


மேலும் கதிர் கண் கலங்கியவாறு அப்பத்தா அருகில் பார்த்தவாறு நிற்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. இனி என்ன நடக்கப் போகிறது என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement