• Apr 20 2024

வாரிசு படத்தில் அனிரூத்தும் இருக்கின்றாரா?- இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்- குஷியான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் தமன்.தெலுங்கின் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து தற்போது தனக்கென தனித்த ரசிகர் பட்டாளத்தையும், பல படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த 68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இசையமைப்பாளர் தமனுக்கு ஆல வைகுண்ட புரமுலு படத்தின் பாடல்களுக்காக மத்திய அரசு சார்பில் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் தேசிய விருதை வென்றார்.இது தவிர விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.


இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


மேலும் அந்த டிவீட்டில் #SSMB28 & #NTR30 என ஹேஸ்டேக்கை பதிவிட்டுள்ளார்.மகேஷ் பாபு நடிப்பில் திரி விக்ரம் இயக்கும் #SSMB28 படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். அதே போல் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கும் #NTR30 படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.மேலும் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் தமன் இசையில் ஒரு பாடலை அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன .


Advertisement

Advertisement

Advertisement