• Apr 20 2024

ஜனனியைத் தொடர்ந்து லியோ படத்தில் அமுதவாணனும் நடிக்கின்றாரா?- அவரே கொடுத்த அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் தான் லியோ.இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.


இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் அமுதவாணன், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பனிமலை சூழ்ந்த இடத்தில் எடுத்த ஒரு Throwback புகைப்படத்தை பகிர்ந்து,  "What If" என்ற கேப்சனுடன் தளபதி 67, லோகேஷ் கனகராஜ் ஆகிய Hashtag-களை பதிவிட்டுள்ளார். 


 இதனால் ரசிகர்கள் பலரும் அமுதவாணன் லியோ படத்தில் நடிக்கின்றாரா எனக் கேட்டு வருகின்றனர்.இருப்பினும் அமுதவாணன் லியோ படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement