• Mar 29 2024

சாய்பாபாவின் பயோபிக் கதையில் அஜித் நடிக்கின்றாரா?- வெளியாகிய அதிரடித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அஜித். விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப் படம் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனியின் கைகளில் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இதுவரை எந்த அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவில்லை. 

இதனால் ரசிகர்கள் எப்போது இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று காத்திருக்கின்றனர்.இப்படியான ஒரு நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விஜய்சேதுபதி கிச்சா சுதீப்  போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது. இருந்தாலும் இது குறித்த அப்டேட்டுக்கள் சரியாக கிடைக்கவில்லை.


இப்படியான நிலையில் தாணு சாய்பாபாவின் பயோபிக் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் சாய்பாபா பக்தனான அஜித் தான் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அஜித் இந்த பயோபிக் படத்தில் நடிக்கவில்லையாம். இப்படத்தில் இராமாயணம் சீரியலில் நடித்த அருண் கோபி என்பவர் தான் நடிக்கவுள்ளாராம் எனறு கூறப்படுகின்றது.


மேலும் ராகவேந்திரரின் பக்தனான ரஜினி ராகவேந்திரா படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவரைப் போல அஜித் பயோபிக் கதைகளை தேர்வு செய்து நடிக்க மாட்டார் என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பபிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement