நடிகை பானுப்ரியாவின் தங்கை படத்தில் நடிக்கிறாரா?-புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

175

80களில் தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் நடித்து இருந்தாலும் சிலர் இன்னமும் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.ராமராஜன் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் சாந்தி ப்ரியா. இவர் நடிகை பானுப்ரியாவின் தங்கையும் கூட.

அவர் தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்தார். அஞ்சலி படத்தில் குட்டீஸ்களுடன் சேர்ந்து அவர் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியதை யாரும் மறக்க முடியாது என்று தான் கூற வேண்டும்.

அத்தோடு அக்காவை போன்றே காந்தக் கண்ணழகி அவர். படங்களில் நடிப்பதை நிறுத்திய அவர் இந்தி தொலைக்காட்சியில் கவனம் செலுத்தி வந்தார்.shantipriyaசித்தார்த் ரே என்கிற இந்தி நடிகரை 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் திருமணமான 5 ஆண்டுகளில் சித்தார்த் இறந்துவிட்டார்.

எனினும் தனி ஆளாக மகன்களை வளர்த்து வரும் சாந்தி ப்ரியா, தாராவி பேங்க் என்கிற இந்தி வெப் தொடரில் சுனில் ஷெட்டி, விவேக் ஓபராயுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டாரே என்கிறார்கள் ரசிகர்கள்.

அது என்னவென்றால் அவர் ஹிந்தியில் சுனில் ஷெட்டி மற்றும் விவேக் ஓபராய் இருவரும் இணைந்து நடிக்கும் Dharavi Bank என்ற வெப் சீரியஸில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

மேலும் இப் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு அவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.