சர்வதேச விருதுகள் பலவற்றைப் பெற்று வரும் நடிகர் ஆர்யாவின் படம்- அட இந்தப்படமா?

234

தமிழ் சினிமாவில் பெண்களைக் கவர்ந்த அழகான நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் நடிக்கும் பல படங்கள் தற்பொழுது ரசிகர்களிடையே பிரபல்யமாவதோடு அதிக வரவேற்பைப் பெற்று வருவதும் தெரிந்ததே. அந்த வகையில்அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார்.

மேலும் 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

அத்தோடு இப்படம் ஏற்கனவே 11 சர்வதேச விருதுகளை வென்றுள்ள நிலையில், தற்போது இஸ்ரேல் மற்றும் பூட்டான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு மேலும் 3 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இஸ்ரேலில் நடைபெற்ற ‘நியர் நசரத்’ திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதையும், பூட்டானில் நடைபெற்ற ‘ட்ரங்க்’ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளில் மகாமுனி படத்துக்கு விருது கிடைத்துள்ளதாக அப்படத்தின் இயக்குனர் சாந்தகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.