ராஷ்மிகா மந்தனா பற்றி ரசிகர்களுக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்..அவரே வெளியிட்டாராம்..!

394

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இவர் அதிக ரசிக பட்டாளத்தை தன் வசம் கொண்டு காணப்படுவார்

மேலும் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவான இவர் தனது புகைப்படத்தை வெளியிடும் பழக்கம் உடையவராக காணப்படுகின்றார்.
மற்ற நடிகைகளைப்போன்று இவரும் தன் வசம் நடிப்பதற்கு பல வாய்ப்பினை குவித்த வண்ணம் காணப்படுகின்றார். அது மட்டும் இன்றி இவர் நடித்த புஸ்பா படத்தில் தனது கவரச்சியை ஒட்டு மொத்தமாக வெளிப்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லேட்டஸ்ட் விஷயம் என்னவென்றால் நடிகை ராஷ்மிகா குடும்பத்திற்கு ஒரு குடும்ப பெயர் உள்ளது என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா என்கிற பெயரில் மந்தனா என்பது அவரது தந்தை பெயர் மதன் மந்தனாவின் பெயரில் இருந்து சேர்த்துக்கொண்டது.அதேசமயம் முண்டசதிரா என்பதுதான் அவர்களது குடும்ப பெயர். தனது பாஸ்போர்ட்டில் இந்த குடும்ப பெயரையும் சேர்த்து ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது படப்பிடிப்புக்காக பாரிஸ் சென்றுளார் ராஷ்மிகா. அதை தெரிவிக்கும் விதமாக தனது பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார். அதன்மூலம் தான் அவரது குடும்ப பெயர் தற்போது வெளியே தெரிய வந்துள்ளது