• Apr 18 2024

சென்னை விமான நிலையத்திற்கு குறி வைக்கும் இந்தியன் 2 படக்குழு- வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்  கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் இந்தியன்-2. இந்தப்படத்தில் கமலுடன் சேர்ந்து  நடிக்க சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தீவிபத்தால் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டது. எனவே இதன் 2ம் கட்ட படப்பிடிப்பானது சென்னையில் வரும் 5-ம் தேதி தொடங்கவுள்ளது.

அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.அத்தோடு அதற்கான படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் தொடங்கவுள்ளது என்று கூறப்படுகின்றது.


2001-ல் வெளிவந்த இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஷங்கர் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்களும், பின்னணி இசையும் படத்தை உயர்த்திப் பிடித்தன.முதல்பாகத்தில் சேனாபதி, சந்துரு என்ற 2 கேரக்டரில் கமல் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 

இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement